நாகர்கோவில் ஒழுகினசேரி, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள பூங்கா அருகே பெரிய கழிவு நீர் ஒடை ஒன்று திறந்த நிலையில் காணப்படுகிறது. நேற்று இரவு கோட்டர் பீச் ரோடு பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் பைக்கில் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இளம்பெண் வந்த பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய இளம்பெண் பைக் உடன் சாலையோரத்தில் இருந்த கழிவு நீர் ஓடையில் பைக்குடன் விழுள் தார். இதனை கண்ட பொதுமக்கள் இளம் பெண்ணை விரைந்து மீட்டனர். விபத்தை ஏற்படுத்திய நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் தப்பி சென்றார். லேசான காயம் அடைந்த இளம் பெண்ணுக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் முதல் உதவி அளித்தனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.