மருங்கூரில் இன்று காலை சாலையில் கவிழ்ந்த பள்ளி வாகனம்

6 பேர் காயம்;

Update: 2025-03-15 11:42 GMT
கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் படித்து வருகின்றனர். அவர்களை வீட்டிலிருந்து பள்ளிக்கும் பள்ளியிலிருந்து வீட்டிற்கும் அழைத்து செல்வதற்காக வாகன வசதி உள்ளது.      அந்த வகையில் இன்று காலை சுமார் 8 மணி அளவில் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று அஞ்சு கிராமம் பகுதிக்கு சென்றது. அங்கிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில்  11 மாணவர்கள் இரண்டு ஆசிரியர்கள் ஆயா என 14 பேர் இருந்துள்ளனர்.      மருங்கூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென வேனில் உள்ள ஸ்டியரிங் ராடு துண்டித்து வேன் சாலையில் தறி கெட்டு ஓடியது.  அப்போது மாணவர்கள் அலறி உள்ளனர். பின்னர் அந்த வேன் சாலையோரம் உள்ள ஒரு கால்வாயில் கவிழ்ந்தது. இதனால் வேனில் . இருந்த 14 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.        அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்த உடனே அங்கு சென்று வேன் கண்ணாடிய உடைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மாணவர்கள் ஒவ்வொருவராக மீட்டனர். இதில் மூன்று மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஆயா .என 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது. மற்ற மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.       இந்த விபத்தில் வேன் நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த அஞ்சு கிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த ஆறு பேர் மீட்கப்பட்டு நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டனர்.

Similar News