கன்னியாகுமரியில் இளம்பெண் மர்ம மரணம்

போலீஸ் விசாரணை;

Update: 2025-03-15 11:50 GMT
கன்னியாகுமரி மரக்குடி தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம். இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது கன்னியாகுமரியில்  மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர் (27). இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் இன்று 15-ம் தேதி காலையில் ஜெனிபர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது.         இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கன்னியாகுமரி போலீசார் இறந்து கிடந்த ஜெனிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.        போலீசார் நடத்திய முதற்கட்டமாக சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெனிபர் தற்கொலை செய்து கொண்டாரா?  அல்லது வேறு ஏதேனும் வழிகளில் இருந்தாரா?  என பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு ஜெனிபர் மரணம் குறித்த உண்மை தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். அவருடைய கணவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News