புள்ளிமானுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.

திருவாரூரில் சாலை விபத்தில் காயமடைந்த புள்ளி மானிற்கு திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கி முயற்சி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.;

Update: 2025-03-15 15:02 GMT
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்த ஒலிமதி கிராமத்தில் புள்ளிமான் ஒன்று மிகுந்த காயம் அடைந்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சாலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக பலத்த காயத்துடன் இருந்த புள்ளி மானை வனத்துறை அதிகாரிகள் மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக திருவாரூர் மாவட்ட கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மானின் இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால் மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்து ஒரத்தநாடு பகுதியில் செயல்பட்டு வரும் கால்நடை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ மனைக்கு மானை முயற்சி வீசுக்காக அனுப்பி வைத்தனர்.

Similar News