மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.
திருவாரூர் மாவட்டத்தில் பருவம் தப்பி பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பயிறு உளுந்து பருத்தி உள்ளிட்ட பயிர்களை ஆய்வு செய்து இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை.;
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமலையின் காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த பச்சைப்பயிறு, பருத்தி, உளுந்து, எல் உள்ளிட்ட பெயர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. சேதமடைந்த பயிர்களை வேளாண்மை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் அல்லது இழப்பீடு வழங்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை நேரில் சந்தித்து தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.