மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை தண்டனை!

10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.;

Update: 2025-03-15 16:35 GMT
வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த அசோக்குமார் (29) இவர் கடந்த 2017-ம் ஆண்டு 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்த வழக்கில் அசோக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

Similar News