செல்வமகள் சேமிப்பு கணக்கு சிறப்பு முகாம்!

வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.;

Update: 2025-03-15 16:38 GMT
வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்கு சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாமில் சிறப்பு விருந்தினராக வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கலந்து கொண்டு 50 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கி புத்தகத்தை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ராஜகோபால், இயக்கத்தில் முதுநிலை அஞ்சல் அதிகாரி முரளி, உதவி அஞ்சல் அதிகாரி அருள்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News