மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள் அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள் அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது;

டாஸ்மாக் ரூ 1,000 ஊழல் மீது மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; டாஸ்மாக் பணம் வருடத்திற்கு ரூ 20,000 கோடி அரசுக்கு வரவேண்டிய வருவாய் எங்கே செல்கிறது என தெரியவில்லை என அன்றைய பிடிஆர் நிதியமைச்சராக இருக்கும் போது கூறினார் - அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் நடைபெற்ற கபடி போட்டி பெண்கள் பிரிவிற்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு பின் முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் அதிமுக வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் இளைஞரணி செயலாளர் ராம் பாண்டியன் ஏற்பாட்டில் மூன்று நாட்கள் நடைபெறும் மாபெரும் மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. அருப்புக்கோட்டையில் முதன்முதலாக நடைபெற்று வரும் மாநில அளவிலான கபடி போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தனித்தனியாக விளையாடி வருகின்றனர். முதலில் பெண்களுக்கான போட்டி நேற்று துவங்கிய நிலையில் இறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றது. ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என கபடி போட்டியில் பெண் வீராங்கனைகள் ஆக்ரோசமாக கபடி கபடி என பாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி எதிர் அணி வீரர்களை ஆட்டம் காண வைத்தனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த பெண்கள் பிரிவுக்கான கபடி போட்டியில் அந்தியூர் அணி முதல் பரிசையும், மதுரை அணி இரண்டாவது பரிசையும், திருச்சி அணி மூன்றாவது பரிசையும் தட்டிச் சென்றது. முதலிடம் பிடித்த அணிக்கு ரூ 51,000 ரொக்க பரிசு கோப்பை, இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ 30,000 ரொக்கப் பணம் மற்றும் கோப்பை, மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு ரூபாய் 20,000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்ததோடு டாஸ் போட்டு இறுதிப் போட்டியை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாஃபா பாண்டியராஜன், பிடிஆர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிதி அமைச்சர் ஆக இருந்தபோது அவரே சொன்ன விஷயம் தான். அப்போது வருடத்திற்கு ரூபாய் இருபதாயிரம் கோடி அரசுக்கு வரவேண்டிய வருவாய் எங்கே செல்கிறது என தெரியவில்லை எனக் கூறினார். தற்போது அவர் கூறிய விஷயத்தில் ஒரு பகுதியை கண்டறிந்துள்ளார்கள். இதை மத்திய அரசு சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.