சிவகாசி மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சித்தலைவர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகாசி மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2025-03-15 18:24 GMT
சிவகாசி மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து   ஆட்சித்தலைவர்  சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • whatsapp icon
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் ஊரகம், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், நலத்திட்டங்கள், சேவைகள் முறையாகவும், தரமானதாகவும் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் 4 ஆவது வார்டு எம்.ஜி.ஆர் காலணியில் ரூ.15 இலட்சம் மதிப்பில் புதிதாக கலையரங்கம் கட்டப்பட்டு வருவதையும், மேலும், திருத்தங்கல் ரயில் நிலையம் செல்லும் பாதையில் 17 ஆவது வார்டில் ரூ.10 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், திருத்தங்கல் கண்ணகி காலனியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்; ரூ.25 இலட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டு வருவதையும், தொடர்ந்து, சிவகாசி மாநகராட்சியில், வார்டு எண் 37-ல் ரூ.40 இலட்சம் மதிப்பில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருவதையும், வார்டு எண் 46-ல் மாரிமுத்து தெருவில் ரூ.23.50 இலட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருவதையும், வெம்பக்கோட்டை முக்கு அருகில் ரூ.10.8 இலட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, திருத்தங்கல் செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருந்துகளின் தரம், இருப்பு, விலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து கேட்டறிந்தார். பின்னர், திருவில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதையும், 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.123 கோடி மதிப்பில் (Bio-methanation Plant) காய்கறி கழிவு மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, அங்கு சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், திருவில்லிபுத்தூரில்; விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்; திட்டத்தின் கீழ் மல்லி முதல் கிருஷ்ணண்கோவில் வரையில் ரூ.5.48 கோடி மதிப்பில் சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

Similar News