திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது
திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது;

தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் காலநிலை மாற்றத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விருதுநகர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் காலநிலை மாற்றத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: குறிப்பாக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய காற்று மாசு எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்த்தால், சுவாசிப்பதற்கு தகுந்த அளவீடுகளில் மிகவும் குறைவாக இருக்கிறது. சமீப காலமாக காற்று மாசுப்பாட்டின் காரணமாக நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக பெரிய நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை முறையாக செய்யாமல் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால் காற்றில் ஏற்படக்கூடி மாசுக்களின் காரணமாக நீண்ட காலத்தில் நுரையீரல் சார்ந்த ஆஸ்துமா நோய் ஏற்பட்டவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கியமான காரணம் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தான். நீர்நிலைகள் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைகிறது. நமக்கு இருக்கக்கூடிய முக்கிய பொறுப்புகலில் முக்கியமானது பிளாஸ்டிக் பொருட்களை குறைப்பது. குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியின் பயன்பாட்டை குறைக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றத்தை பார்த்தோம் என்றால் தனிநபரின் உடல் நலனில் பிரச்சினை, சமூகத்தின் உடைய சுற்றுப்புற சுகாதாரத்திற்கு பிரச்சினை, கண்ணுக்கு தெரியாத நாம் நேரடியாக பார்க்க முடியாத நம் உணவு உற்பத்தியிலும் பிரச்சினை என்று அனைத்திலும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைத் தாக்கத்தின் பிரச்சினை அதிகமாகி கொண்டே இருக்கிறது. உலகம் ழுழுவதும் சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஓவ்வொரு வீடுகளிலும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும். எனவே, ஒரு நிர்வாக அமைப்புகளோ, அரசு இயந்திரங்களோ மட்டுமே சுற்றுசூழல் தொடர்புடைய பருவ நிலை மாற்றங்கள் தொடர்பாக ஏற்படக் கூடிய அடிப்படை பிரச்சனைகளுக்கும், பாதிப்புகளுக்கும் தீர்வு காண இயலாது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் இணைந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பாதிப்புகளை தடுக்க முடியும். மேலும், பொதுமக்கள் நடைமுறை வாழ்க்கையில் பிளாஸ்டிக்கை தவிர்த்து, வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்த வேண்டும். நவீன தொழிநுட்ப பயன்பாடுகளை அதிகம் குறைத்து நெகிழிகளை தவிர்க்க வேண்டும். அதற்காக அரசு பல திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் உடைய பசுமை இயக்கத்தின் மூலமாக மஞ்சப்பை விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். எனவே, பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்த ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினையும் நமக்கு இருக்கக்கூடிய பல பிரச்சினைகளில் ஒரு பிரச்சினை என்று கருதாமல், இதற்கு முக்கியத்துவம் தந்து செயல்பட்டால் தான் அடுத்த தலைமுறையினரை பாதுகாக்க முடியும். இது குறிப்பாக நேரடியாக மக்களை பாதிக்க துவங்கி விட்டது. தனிநபரின் உடல் நலனை, நம் உணவு உற்பத்தியை, நம்முடைய சுற்றுச்சூழலை, நீர்நிலைகள் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை பாதிக்கிறது. இவ்வாறு நேரடியாக மனிதனை பாதிக்க தொடங்கி விட்டது. சூற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றப் பிரச்சினைகளை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பத்திரிக்கைககள் மற்றும் ஊடகத்தில் பணிபுரிபவர்கள் இது குறித்து நன்கு புரிந்து கொண்டால் தான் அறிவுப்பூர்வமான பிரச்சனைகளை மக்களுக்கு எடுத்து சொல்ல முடியும். அது குறித்து பிரச்சனைகளை கவனமாக கையாளமுடியும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். பின்னர், மரு.கிருபா நந்தினி அவர்கள் சமூக வலைதளத்தில் பறவைகள் என்ற தலைப்பிலும், திரு.சித்தரவேல் அவர்கள், முனைவர் ஜெயபிரகாஷ் தர்மராஜ் அவர்கள் மற்றும் மரு.ஜெயகுமரன் அவர்கள் ஆகியோர்கள் காலநிலை மாற்றத்தில் ஊடகவியலாளரின் பங்கு என்ற தலைப்பிலும், திரு.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் காலநிலை மாற்றம் பற்றி பத்திரிகை அணுகுமுறைகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்