வாலிபர் கைது

கருங்கல்பாளையம் காவிரி சாலையில் இன்று காலை 2.900 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது;

Update: 2025-03-16 03:04 GMT
ஈரோடு கருங்கல்பாளையம், பழைய ரிஜிஸ்டர் அலுவலகம் அருகே காவிரி சாலையில் இன்று காலை கருங்கல்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை ஒருவரை பிடித்து விசாரணை அனுப்பினார். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் 2.900 கிலோ கஞ்சா விற்பதை கண்டு அடைந்தனர். போலீஸ் விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆவாரங்காடு , காந்தி நகரைச் சேர்ந்த சக்திவேல் (28) என்பதும் சென்னையில் இருந்து ரெயில் மூலம் ஈரோடு வந்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எங்கிருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டது. இந்த கடத்தல் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News