குண்டம் ர

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு;

Update: 2025-03-16 03:08 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் குண்டம் விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி அம்மனை தரிசனம் செய்வர். குண்டம் இறங்குவதற்காக இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா வரும் 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் க கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் உயர் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கலந்து கொண்டனர். வழக்கமாக குண்டம் இறங்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வருவர். ஆனால் இந்த ஆண்டு குண்டம் இறங்கும் பக்தர்கள் கோவிலை விட்டு வெளியே வந்து பின்னர் மீண்டும் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .ஏற்கனவே குண்டம் இறங்குவதற்காக இரண்டு நாட்கள் வரிசையில் காத்திருந்து வரும் பக்தர்களை மேலும் சோர்வடையச் செய்யும். இதனால் பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News