தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை நடைபெற்றது
முருகன் கோயிலில் வருண கலச பூஜை நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையம் சாலையில் தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை, நடைபெற்றது. முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிகள் தளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.