கன்னியாகுமரி கணேசமணி ஆஸ்பத்திரி மற்றும் கே.ஹெச்.ஐ டிரஸ்ட் இணைந்து நடத்திய இலவச கிட்னி நோய்க்கான மருத்துவ முகாம் நேற்று முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவிலில் கலையரங்கில் வைத்து நடந்தது. முகிலன்குடியிருப்பு ஊர் தலைவர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி துவக்கி வைத்தார். முகாமில் டயாலிசிஸ் ,இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கிட்னி ஸ்கேன், இரத்த பரிசோதனை உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. டாக்டர்கள் பிரபு காஞ்சி, ரகுராம்,காஞ்சனா,ஆல்பா ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர். முகாம் துவக்க நிகழ்ச்சியில் ஊர் நிர்வாகிகள் செல்ல சிவலிங்கம்,கிருஷண் கோபால் ,சுயம்பு அப்பாதுரை ,ரகுபதி, ஆசிரியர் பொன் டேவிட் உட்பட பலர் பங்கேற்றனர்.