மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா, வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடைபெறுகிறது.;

Update: 2025-03-16 16:58 GMT
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா, வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது.அதன்படி 2-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக பிரம்மோற்சவ கொடியேற்றம் நடக்கிறது. விழாவின் நிறைவாக, 13-ந் தேதி இரவு 9 மணிக்கு பள்ளியறை உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் பிரியா தலைமையில், உற்சவ உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Similar News