வடஇந்தியாவிலிருந்து தஞ்சாவூர் பகுதிக்கு முதன்முறையாக வலசை வந்த புள்ளி மூக்கு வாத்துகள்....  பறவைகள் கணக்கெடுப்பு ஆய்வில் தெரிய வந்தது

பறவைகள் கணக்கெடுப்பு;

Update: 2025-03-16 17:09 GMT
வட இந்தியாவிலிருந்து தஞ்சாவூர் பகுதிக்கு புள்ளி மூக்கு வாத்துகள் முதன்முறையாக வலசை வந்துள்ளது பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு வருடம் தோறும் நடைபெற்று வருகிறது.  அதன்படி இந்த வருடத்துக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி தஞ்சாவூர் அருங்கானூயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து தஞ்சாவூர் வனக்கோட்டத்தின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து தஞ்சாவூர்  வனச்சரகர் ரஞ்சித், வனவர்கள் இளையராஜா, ரவி மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர் சதீஷ்குமார் ராஜேந்திரன் தலைமையில் 15 தன்னார்வலர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை பறவையில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாக காடுகளில் 70 வகை பறவை இனங்களைச் சேர்ந்த  1,113 பறவைகளும் கணக்கிடப்பட்டன, மேலும், வளாகத்தில் உள்ள குளத்தில் வலசைப் பறவையான புள்ளி மூக்கு வாத்துகள் காணப்பட்டது. தஞ்சாவூர் நகரப் பகுதிகளில் காணப்படுவது முதல் முறையாக இந்த வாத்துகள் காணப்பட்டன. அதே போல் செம்மார்பு குக்குருவான் குருவிகளும் அதிக அளவில் காணப்பட்டது. அதே போல், தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காடுகளில்  58 பறவை இனங்களும், 667 பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டன. இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் சென்னம்பட்டி, ஆச்சம்பட்டி  காப்பு காடுகளிலும், கும்பகோணம் வனச்சரகத்தின் சார்பில் மகாராஜபுரம் அணைக்கரை பகுதிகளில் தன்னார்வலர்கள் மருத்துவர் ப்ரீத்தி, பெஞ்சமின் கொண்ட குழுவினரால் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Similar News