ஆலங்குளம் உள்கோட்ட பெண் காவலா்களின் மகளிா் தினவிழா

பெண் காவலா்களின் மகளிா் தினவிழா;

Update: 2025-03-17 01:03 GMT
ஆலங்குளம் உள்கோட்ட பெண் காவலா்களின் மகளிா் தினவிழா
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட ஆலங்குளம், ஆலங்குளம் அனைத்து மகளிா், சுரண்டை, வி.கே.புதூா், ஊத்துமலை, கடையம் மற்றும் ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் காவலா்கள் இதில் கலந்து கொண்டனா். ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்ஸன் ஜோஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு காவலா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்லால், ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், அனைத்து காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Similar News