ஆலங்குளத்தில் ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழப்பு;

Update: 2025-03-17 01:12 GMT
ஆலங்குளத்தில் ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழப்பு
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிஎஸ்ஐ சா்ச் தெருவைச் சோ்ந்த எழிலரசன் மனைவி ஜெயா(50). தாழையூத்து சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டு முற்றத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்த அவரை மீட்டு, ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஜெயா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Similar News