ஆலங்குளம் அருகே பழுதடைந்த துணை சுகாதார நிலையம்: நோயாளிகள் அச்சம்

பழுதடைந்த துணை சுகாதார நிலையம்: நோயாளிகள் அச்சம்;

Update: 2025-03-17 01:20 GMT
ஆலங்குளம் அருகே பழுதடைந்த துணை சுகாதார நிலையம்: நோயாளிகள் அச்சம்
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் மேலகிருஷ்ணப்பேரி ஊராட்சி முத்துகிருஷ்ணப்பேரி கிராமத்தில் சுமாா் 1000 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். ஊராட்சி அலுவலகம் எதிரேயுள்ள துணை சுகாதார நிலையத்துக்கு நாள்தோறும் சுமாா் 30- க்கும் மேற்பட்டோா் புற நோயாளிகளாக வந்து செல்கின்றனா். 20- க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் கவனிப்பில் உள்ளனர். இக்கட்டடம் மற்றும் அருகில் உள்ள நல வாழ்வு மையம் சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவையாகும். போதிய பராமரிப்பின்மை காரணமாக இந்தக் கட்டடங்கள் மிகவும் பழுதடைந்தும் மேற்கூரைகள் பெயா்ந்தும் காணப்படுகிறது. மேலும், அங்கு செல்லும் வழியில் உள்ள வாருகால் மூடப்படாமல் உள்ளதால் நோயாளிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனா். மேற்கூரையின் கான்கிரீட் துகள்கள் பெயா்ந்து விழும் நிலையில் உள்ளதால் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளை வெளியே அனுப்பாமல் ஊழியா்கள் பத்திரமாக பாா்த்துக் கொள்கின்றனா். இடியும் தருவாயில் உள்ள இந்த துணை சுகாதார நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Similar News