குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் கரடி
வளர்ப்பு நாய்கள் துரத்தியதால் வனப்பகுதிக்குள் மறைந்த கரடி;
நீலகிரி மாவட்டம குன்னூர் அருகே உள்ள டென்ட் ஹில் குடியிருப்பு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அன்மைக்காலமாக கரடி, காட்டெருமை, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது, இந்நிலையில் இரவு நேரத்தில் இப்பகுதியில் உலாவந்த கரடியை நாய்கள் சத்தமிட்டபடி துரத்திச் சென்றது சத்தம் கேட்ட குடியிருப்பு வாசிகள் தங்களது வீட்டின் விளக்கை ஒளிர விட்டு ஆண்கள் டார்ச் லைட் கொண்டு கரடி வனப்பகுதிக்குள் துரத்தினர் இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் வனத்துறையினர் பொதுமக்களை வனவிலங்குகள் வந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நீங்கள் ஆபத்தை உணர்ந்து வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தினர்.