புளியறையில் கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது
கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது;

தென்காசி மாவட்டம் புளியறை காவல் சரகம் தாட்கோ நகரில் கஞ்சா விற்ாக திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த பெ.தினேஷ் என்பவா் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், தென்காசி மாவட்ட எஸ்.பி. அரவிந்த் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் பிறப்பித்த உத்தரவின்படி, அவரை செங்கோட்டை காவல் ஆய்வாளா் பாலமுருகன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தாா். கஞ்சா பறிமுதல்: கடையம் காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா தலைமையில் அங்குள்ள ஒன்றிய அலுவலகம் அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில், மந்தியூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த வேலாயுதம் மகன் வினோத் (29) என்பதும், 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, பைக் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.