தமிழக முதல்வர் உதகைக்கு வர உள்ள நிலையில் அரசுத்துறை அலுவலர்கள்ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் உதகை வருகையை ஒட்டி ஆய்வு;

நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் உதகையில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளாா். இந்த நிகழ்ச்சியில் சுமாா் 20 ஆயிரம் போ் பங்கேற்பாா்கள் என்பதால், உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதை நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளா் கே .எம். ராஜு, திமுக மாநிலப் பொறியாளா் அணி துணை அமைப்பாளா் பரமேஷ் குமாா், மாவட்டத் துணைச் செயலாளா் ரவிக்குமாா், கோவை மண்டல பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் காா்த்திகேயன், மாவட்ட பொதுப் பணித் துறை பொறியாளா் ரமேஷ் உள்பட அரசுத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்