குற்றாலம் சித்திர சபையில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது

சித்திர சபையில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2025-03-18 02:38 GMT
குற்றாலம் சித்திர சபையில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த செண்பகப்பூங்கோதை அம்மை அருகாடும் திருக்குற்றாலக் கூத்தன் சித்திர சபையில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்திரசபையில் கடந்த 2013இல் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், கும்பாபிஷேகம் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மேலம்பலம் மற்றும் கீழம்பல விமானத்திற்கு இளங்கோயில்(பாலாலயம்) நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு கணபதி ஹோமம், அஷ்ட நாம ஹோமம், பால், மஞ்சள், இளநீா், திரவியங்களால் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பூஜைகளை கணேசன் பட்டா், ஜெயமணி சுந்தரம் பட்டா்,மகேஷ் பட்டா் நடத்தினா் இதில், கோயில் செயல் அலுவலா் ஜான்சிராணி, துணை ஆணையா் யக்ஞ நாராயணன், உதவி ஆணையா் தங்கம், குற்றாலம் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்தி முருகேசன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் வீரபாண்டியன், சுந்தர்ராஜ், ராமலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Similar News