சிறியூர் மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது

ஆடல் பாடல் என நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்ட பக்தர்கள்;

Update: 2025-03-18 02:43 GMT
  • whatsapp icon
நீலகிரி மாவட்டம் ஊட்டி மசினகுடி அருகே உள்ள சிறியூர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழாவுடன் இந்த ஆண்டு திருவிழா துவங்கியது. தொடர்ந்து கம்பம் நாட்டு விழா, அலங்கார பூஜை, அம்மன் அழைப்பு, ஆகியவை நடந்தன, பூ குண்டத்திற்கு மரம் கொண்டு வரப்பட்டது. மாலை 3:00 மணிக்கு மாசி கரியண்ட ஐயன் அழைப்பு நடந்தது. ஜடய லிங்க ஐயன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் ஆகியவை நடைபெற்றது விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Similar News