கலவை அருகே பழங்குடியினர் வசித்த வீடுகளின் தரம் குறித்து ஆய்வு

பழங்குடியினர் வசித்த வீடுகளின் தரம் குறித்து ஆய்வு;

Update: 2025-03-18 04:55 GMT
கலவை அருகே பழங்குடியினர் வசித்த வீடுகளின் தரம் குறித்து ஆய்வு
  • whatsapp icon
கலவையை அடுத்த அத்தியானம் கிராமத்தில் பழங்குடியினர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு முன் 10 வீடுகள் கட்டப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு மழையின் காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்தது. அப்போது இருந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து மற்ற 9 வீடுகளில் இருந்தவர்களை பாதுகாப்பு கருதி வெளியேறுமாறு அறிவுறுத்தினார். மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இடிந்து விழுந்த வீடு மற்றும் இதர 9 வீடுகளில் அடித்தளம் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்று வீட்டின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி அடித்தளத்தை ஆய்வு செய்ததுடன் வீட்டின் தரத்தினையும் ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் விஜயலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் நடராஜன், வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் கந்தசாமி, வித்யாசாகர் ஆகியோர் ஆய்வில் உடன் இருந்தனர்.

Similar News