ராமநாதபுரம் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
கடலாடி காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் மீது போலீஸார் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.;

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள ஏ.புனவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் முத்துப்பாண்டி என்ற சேவாக்(26). இவர் மீது கடலாடி, சிவகங்கை உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் உள்ளார். இவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஸ் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முத்துப்பாண்டி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.