ராமநாதபுரம் இரண்டு கார் நேருக்கு நேர் மோதி விபத்து

கமுதி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 5 பேர் காயம்.;

Update: 2025-03-18 05:45 GMT
  • whatsapp icon
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சடையன்பட்டியை சேர்ந்தவர் மாதவன் மகன் சுப்பிரமணி(32). இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள அரண்மனை மேடு பகுதியில் முதுகுளத்தூர்}கமுதி சுற்றுவட்டாரச் சாலையில் எதிரே வந்த கார் மோதி சுப்பிரமணியனின் கார் விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த சுப்பிரமணியன் மனைவி சங்கீதா(27), இவர்களது உறவினர் பாலமுருகன் மகன் அருண்(24), பாஸ்கரன் மனைவி சுமதி(32), ஆறுமுகம் மகன் மாதவன்(55) உள்ளிட்ட 5 பேரும் படுகாயம் அடைந்து, கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சுப்ரமணியன் கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதிவேகமாக விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை ஆழவந்தாபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் முருகானந்தம்(55) என்பவர் மீது போலீஸôர் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Similar News