சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது

நகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது;

Update: 2025-03-18 07:04 GMT
சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்களுக்கு கலந்து கொண்டனர். இதில் தாமஸ் நகர், சங்குபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகராட்சி துணைத்தலைவர், நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Similar News