ஒரக்காட்டுப்பேட்டையில் பூட்டியே கிடக்கும் நுாலகம்
ஒரக்காட்டுப்பேட்டையில் நுாலகத்தை முறையாக திறந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை;

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டையில், அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, 15 ஆண்டுகளுக்கு முன் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நுாலகம் கட்டப்பட்டது. இந்நுாலகம், பயன்பாட்டிற்கு வந்த துவக்கத்தில் சில மாதங்கள் செயல்படுத்தப்பட்டன. அதை தொடர்ந்து, நுாலகம், சில ஆண்டுகளாக சரி வர இயங்காமல் பூட்டியே கிடப்பதாக கூறப்படுகிறது. எனவே, ஒரக்காட்டுப்பேட்டையில் நுாலகத்தை முறையாக திறந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.