கோவை: வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது !
பீடு புகுந்து நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது.;

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் புவனேஸ்வரி (30) என்பவர் 01.10.2024 அன்று வீட்டை பூட்டி விட்டு அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இது தொடர்பாக அவர் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று காளிபாளையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த, செந்தில்குமார்(54) என்பவரிடம் விசாரணை செய்யும் போது, அவர் தான் வீடு புகுந்து திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து இருசக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனர்.