ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகள் மற்றும் தெருக்கள் தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலையாக மாற்ற பகுதி மக்கள் கோரிக்கை.
ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகள் மற்றும் தெருக்கள் தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலையாக மாற்ற பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.;

அரியலூர், மார்ச்.19- ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகள் மற்றும் தெருக்கள் தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. ஆனால் நகராட்சிக்கு மிக அருகில் விருத்தாசலம் மெயின் ரோட்டில் (பூலோகம் சந்து) எனப்படும் இந்த தெரு மட்டும் 17 ஆண்டுகளாக போடப்படாமல் கற்களால் நிரம்பி நடக்க தகுதியற்ற நிலையில் உள்ளது. வார்டு கவுன்சிலர் முதல் அலுவலர்கள் வரை அனைவரிடமும் முறையிட்டு நடவடிக்கை இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே அந்தப் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.