ராமநாதபுரம் இளைஞருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது
மீனவர் இளைஞர்களுக்கான மூன்று மாத கால திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு நிறை விழா நடைபெற்றது;
ராமநாதபுரம் தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த,இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் மற்றும் இதர பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக ரூ.90 இலட்சத்தில் 6 மாத இலவச பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த பயிற்சி மையத்தில் மாணவர்கள் ஆர்வமாக கற்கும் அதிகாரிகளும் சுலபமாக பயிற்சி அளிக்கின்றனர். இதுவே மாணவர்களுக்கு முதல் வெற்றி. இதே போல் பயிற்சியின் போது அரசுத் தேர்வுகள் மற்றும் போலீஸ் தேர்வுகளுக்கு தேவையான மெட்டீரியல் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே 'கோட்டைமேடு' காவலர் பயிற்சி பள்ளியில் ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கடற்கரை யோர 40 மீனவ கிராம இளைஞர்களுக்கு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மூன்று மாத திறன் மேம்பாட்டு விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் மீனவர் வளம் மற்றும் மீன்வளத்துறை இயக்குனர் கோபிநாத் பங்கேற்று பயிற்சியை நிறைவு பெற்ற மீனவ கிராம இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இப்பயிற்சியில் கலந்துக் கொண்டவர்கள் சம்மந்தப்பட்ட இந்திய கடலோர காவல் படை, இந்திய கப்பற்படை மற்றும் இதர துறைகள் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கான தங்களது உடற்திறன் மற்றும் எழுத்துத்திறன் தகுதிகளை இச்சிறப்பு பயிற்சிகள் மூலம் மேம்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.