ராமநாதபுரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது வருகிறது

தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை இசை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது;

Update: 2025-03-19 07:22 GMT
ராமநாதபுரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது வருகிறது
  • whatsapp icon
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர் இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து ஒரு விசைப்படகையும் அதில் இருந்த மூன்று மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது இதனை அடுத்து இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டு வருவதினால் 700 க்கு மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது மேலும் இந்த வேலை நிறுத்தத்தினால் ஒரு நாளைக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதோடு நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5000 மேற்பட்ட மீன்பிடி தொழிலை சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News