முன்விரோதம் காரணமாக இரு சக்கர வாகனங்களை தீயிட்டு எரித்தவர்கள் மீது வழக்கு
வழக்கு;
உத்தமபாளையம், உ.அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜய், மாரிஸ் கண்ணன், சூர்யா, கிஷோர் ஆகியோருக்கும் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக (மார்.18) விஜயகாந்த் வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது குடும்பத்தினரின் 2 பைக்குகளுக்கு விஜய் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து தீ வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு.