தேனி நகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-03-19 11:43 GMT
தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு முறையாக அடிப்படை வசதிகள் செய்து தராத தேனி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறையாக குப்பைகளை அகற்றாமல் இருப்பதாகவும், நகராட்சிக்காண சொத்து மற்றும் தொழில் வரி வசூல் செய்வதில் நகராட்சி அலுவலர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு பேரம் பேசுவதாகவும் இதனை தடுக்க தவறிய நகராட்சி ஆணையத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது நகராட்சி அலுவலகம் முன்பாக குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் நகராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும், நகராட்சிக்கான வரியை முறையாக வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர் தேனி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Similar News