கும்பகோணம் அருகே வீட்டில் திருட்டு, காவல்துறை விசாரணை

திருட்டு;

Update: 2025-03-19 12:55 GMT
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அசூரில் உள்ள எஸ்.வி.எஸ்., நகரை சேர்ந்த பிரபு. இவரது மனைவி விஜயலெட்சுமி,38,. கடந்த 15 ஆம் தேதி விஜயலெட்சுமி தனது தாயார் வீட்டிற்கு சென்று இருந்தார். பிறகு மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒரு சவரன் தங்க செயின், இரண்டேகால் பவுன் கை செயின், கால் பவுன் தோடு, 40 கிராம் வெள்ளி பொருட்கள், 3 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து விஜயலெட்சுமி அளித்த புகாரின் பேரில், சுவாமிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருடு போன வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து,மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News