ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.;

அரியலூர். மார்ச்.19- அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் அடிப்படையில் அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வரலட்சுமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் டிஎஸ்பி சீராளன் போதையால் ஏற்படும் விளைவுகள் சிதையும் குடும்பங்கள், அழிந்து வரும் இளைய தலைமுறையினர் ஆகியவற்றை பற்றி விரிவாக சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வினா விடை போட்டியும், பேச்சுப் போட்டியும், செறிவூட்டப்பட்ட உணவு வகைகள் குறித்த கண்காட்சியும் நடைபெற்றது, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது, நிகழ்வில் மாணவ ,மாணவிகளை 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள் . என் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் உணவு பாதுகாப்பு அலுவலர் அகத்தியா செய்திருந்தார். நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாபு களப்பணி உதவியாளர் விஜயகுமார்,ஜெயங்கொண்டம் காவல்துறை துணை ஆய்வாளர் நந்தகுமார், இயற்பியல் துறை இணை பேராசிரியர் ராஜமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.முடிவில் ஜெயங்கொண்டம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.