
தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமானோர் சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கோபிச் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி(68) என்பவர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் கழிவறைக்கு சென்று வந்தவர், கேரளாந்தன் நுழைவு வாயில் அருகே வந்த போது, திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறினார். உடனடியாக உறவினர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் வந்ததும், உறவினர்கள் ஆம்புலன்ஸில் அவரை அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தியின் குடும்பத்தினர், அவரது உடலை சொந்த ஊருக்கு வேறு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர்.