தஞ்சாவூர் அருகே ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்

நீதிமன்றத்தில் சரண்;

Update: 2025-03-19 15:54 GMT
தஞ்சாவூர் அருகே ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்
  • whatsapp icon
தஞ்சாவூர் அருகே ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டவர் செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தஞ்சாவூர் அருகே ஏழுப்பட்டியைச் சேர்ந்தவர் குருந்தையன் (50), இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் இருந்தது. இந்நிலையில் கடந்த 11- ஆம் தேதி அதே பகுதியில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வல்லம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஏழுப்பட்டியைச் சேர்ந்த ஒத்தக்கை ராஜா உள்ளிட்ட 8 பேரை ஏற்கெனவே கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட கடலூரைச் சேர்ந்த கலைவாணன் (38) என்பவர் செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் முதலாம் எண் நீதிமன்ற நடுவர் முன் சரணடைந்தார். இதையடுத்து அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Similar News