கடையில் பண மோசடி செய்ததாக பெண் விற்பனை மேலாளர் மீது காவல் துறையில் புகார் 

புகார்;

Update: 2025-03-19 15:56 GMT
கடையில் பண மோசடி செய்ததாக பெண் விற்பனை மேலாளர் மீது காவல் துறையில் புகார் 
  • whatsapp icon
தஞ்சாவூர் பகுதியில் இறைச்சிக் கோழி மொத்த விற்பனைக் கடையில் மேலாளராக பணியாற்றிய பெண் கடையிலிருந்து ரூ.81,640 ஐ மோசடி செய்து விட்டார் என கடை உரிமையாளர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். தஞ்சாவூர் கீழவாசல், பெரிய அரிசிக்கார தெரு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சுரேஷ் பாண்டியன் (42 ) . இவர் கோழிகள் மொத்த விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில், தஞ்சாவூர் கணபதி நகர் பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகள் வித்யா மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை கடை பணத்திலிருந்து வித்யா ரூ.81,640 ஐ சிறிது சிறிதாக மோசடி செய்து வந்துள்ளார். கடை வரவு-செலவு கணக்குகளை உரிமையாளர் சுரேஷ் பாண்டியன் சரிபார்த்தபோது இந்த மோசடி நடந்தது தெரியவந்தது. இது குறித்து சுரேஷ் பாண்டியன் தமிழ் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் காவல்துறை உதவி ஆய்வாளர் விஷ்ணு பிரசாத் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News