நாகமங்கலம் பெருமாள் கோயில் பேருந்து நிறுத்ததில், நிழல்குடை அமைக்க வலியுறுத்தல்
நாகமங்கலம் பெருமாள் கோயில் பேருந்து நிறுத்ததில், நிழல்குடை அமைக்க வலியுறுத்தப்பட்டது.;

அரியலூர்,மார்ச் 19- அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் கிராமத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு அக்கட்சியின் மூத்த நிர்வாகி பிச்சைப்பிள்ளை தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட துணைச் செயலர் தண்டபாணி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் செயல்பாடுகள் மற்றும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார்.மாநாட்டில்,செயலாளராக பிச்சைப்பிள்ளை, துணைச் செயலாளராக சின்னம்மாள், பொருளாளராக தையல்நாயகி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில், நாகமங்கலம் பெருமாள் கோயில் மற்றும் திரௌபதியம்மன் கோயில் ஆகிய இரு பேருந்து நிறுத்தங்களிலும் நிழல்குடை அமைக்க வேண்டும். கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.