மாவட்ட காவல்அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-03-19 16:06 GMT
மாவட்ட காவல்அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
  • whatsapp icon
அரியலூர்,மார்ச் 19- அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவர்களிடம் பெற்ற 21 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News