புத்தகத் திருவிழா: முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
புத்தகத் திருவிழா: முன்னேற்பாடு பணிகள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.;
அரியலூர், மார்ச் 19- அரியலூர் அடுத்த வாலாஜா நகரம், அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில், மாவட்ட நிர்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை மாலை தொடங்கவுள்ள 8 ஆவது அரியலூர் புத்தகத் திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் பொ.ரத்தினசாமி புதன்கிழமை ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில் மேடை அமைத்தல், புத்தக அரங்குகள் அமைத்தல், பொதுமக்கள் வந்து செல்வதற்கான பாதைகள் அமைத்தல், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பேச்சாளர்களுக்கான தங்கும் வசதிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்ட அவர், அப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். :