செஞ்சியில் சிறுமிக்கு திருமணம் வாலிபர் மீது போக்சோ வழக்கு
சிறுமிக்கு திருமணம் வாலிபர் மீது போக்சோ வழக்கு;
விழுப்புரம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி. வெங்கந்துாரை சேர்ந்த தனது தாய் மாமன் மாரி, 24; என்பவரை காதலித்து 14 மாதங்களுக்கு முன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.சிறுமி கர்ப்பமானதால் அவரை சில தினங்களுக்கு முன்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.சிறுமி கர்ப்பமாக இருந்ததால் மருத்துமனை நிர்வாகத்தினர் விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று மாரி மீது நேற்று முன்தினம் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.