செல்வ கணபதிக்கு சிறப்பு பூஜை!
ஸ்ரீ செல்வ கணபதி ஆலயத்தில் இன்று செல்வ கணபதிக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.;
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ கணபதி ஆலயத்தில் இன்று மார்ச் 19 புதன்கிழமை செல்வ கணபதிக்கு அபிஷேகம் செய்து, பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.