கோயில்களில் தேமுதிக-வினர் சிறப்பு வழிபாடு

கோயில்களில் தேமுதிக-வினர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update: 2025-03-19 16:43 GMT
அரியலூர், மார்ச் 18- தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அரியலூர், கல்லங்குறிச்சி  உள்ளிட்ட கோயிலிகளில் அக்கட்சியினர் சிறப்பு வழிபாடு நடத்தி, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். அரியலூர் செட்டி ஏரிக்கரையிலுள்ள விநாயகர் கோயிலில், தேமுதிக மாவட்டச் செயலர் இராம.ஜெயவேல் தலைமையில், பொருளாளர் சக்திவேல், துணைச் செயலர் சக்தி பாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, அரியலூர் வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் ரவி, நகர அவைத் தலைவர் மதி,  மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் கீதா உள்ளிட்டோர் முன்னிலையில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். பின்னர் அவர்கள், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி பிரேமலதா பிறந்த நாளை கொண்டாடினர். இதேபோல் அந்தந்த கிளைகள் சார்பில் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

Similar News