மயிலம் அருகே மது பாட்டில் கடத்திய இருவர் கைது

மது பாட்டில்கள் பறிமுதல்;

Update: 2025-03-19 16:58 GMT
மயிலம் அடுத்த முப்புளி குளக்கரை அருகே டி.எஸ்.பி., பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்ததில், 80 புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், திருவண்ணாமலை, பாலாஜி நகரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கலையரசன் 30; இதே பகுதியில் சாவல் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் மணிகண்டன், 23; என தெரிந்தது.அதனைத் தொடர்ந்து ஸ்கூட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, பிடிபட்ட இருவரையும் மயிலம் போலீசில் ஒப்படைத்தனர். இருவர் மீதும் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Similar News