விழுப்புரத்தில் புகையிலைப் பொருட்கள் தற்போது குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்;

Update: 2025-03-19 17:02 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பது மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தொடா்புடைய அலுவலா்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு அருகில் செயல்படும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்பதை தொடா்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடையே புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை தடுப்பு செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.காவல் துறை, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், உள்ளாட்சித் துறை அலுவலா்கள் இணைந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தொடா்பான ஆய்வுகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டோா் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா்.முன்னதாக, புகையிலைப் பொருள்கள் விற்பனை தடுப்பு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். ஆய்வுக் கூட்டத்தில், உதவி ஆணையா் (கலால்) கே.ராஜீ, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சுகந்தன், மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் மீனா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Similar News