உங்களைத் தேடி உங்கள் ஊத்திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களை ஆய்வு செய்த ஆட்சியர்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் முகாமிட்டு இன்று கள ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-03-19 18:12 GMT
மஞ்சக்குடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகள் குறித்தும், மஞ்சக்குடி பகுதியிலுள்ள நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, துவரம்பருப்பு, சர்க்கரை, ஆயில் போன்ற பொருட்களின் இருப்பு விவரம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மஞ்சக்குடி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.97 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தினையும், காளியம்மன் கோவில் தெருவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளியால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீட்டினையும், அன்னவாசல் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.21 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பழுது நீக்க பணிகளையும், சமையல் கூடத்தில் மதிய உணவிற்காக சமைக்கப்படும் உணவின் தரம் குறித்தும், அங்கன்வாடி மையத்திலுள்ள குழந்தைகள் சரியான எடை, உயரத்தில் உள்ளார்களா எனவும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Similar News