தடுப்பூசி முகாமினை நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்த ஆட்சியர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊத்திட்டத்தின் கீழ் முகாமிட்டு பல்வேறு அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து வரும் மாவட்ட ஆட்சியர் குடவாசல் அருகே உள்ள சிமிழி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்புச் முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு.;

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் “தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்” திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் முகாமிட்டு இன்று கள ஆய்வு மேற்கொண்டார். மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஒவ்வொரு மாதமும், ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவதுடன், அனைத்து அரசு துறை உயர் அலுவலர்களும் வருவாய் வட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிமிலி கிராமத்தில் அங்கன்வாடி மையத்திலுள்ள குழந்தைகள் சரியான எடை, உயரத்தில் உள்ளார்களா எனவும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு குறித்தும் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.